மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மூன்று மாதம் மட்டுமே கால அவகாசம் ஆதாரில் இதனை செய்திருக்க வேண்டும்!
ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய ஆவணமாக மாறி வருகின்றது. தற்போதுள்ள சூழலில் ஆதார் எண் இருந்தால் மட்டும் போதுமானதாக மாறி வருகின்றது. நாம் வைத்துள்ள ரேஷன் அட்டை, வங்கி கணக்கு, மின் இணைப்பு, பான் கார்டு போன்ற பல்வேறு முக்கிய ஆவணங்களுடன் இந்த ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருப்பதி போன்ற கோவில்களுக்கு செல்லும் பொழுது ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையிலும் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை நேற்று முதல் தொடங்கி வரும் ஜூன் 14ஆம் தேதி வரை இலவசமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை ‘my Aadhaar ‘ என்ற இணையதளத்தில் மட்டுமே இலவசமாக பெற முடியும்.
ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுப்பித்தால் வழக்கம்போல் ரூ 50 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பயனாளர்கள் ‘myaadhaar.uidai.gov.in’ என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி தங்களின் தரவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.