ரேஷன் கடை ஊழியர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ் வேலை பாதிக்கும் நிலை? இனி உணவு தானிய ஏடிஎம் மூலம் பொருட்கள் வழங்கப்படும்!
அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட நேர வரிசையில் காத்திருந்து உணவுப் பொருட்கள் வாங்கி வரும் நிலை நிலவி வருகின்றது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை ரேஷன் அட்டையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும். ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. ரேஷன் கடைகளில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து உணவுப் பொருட்களை வாங்கி செல்லும் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் நாட்டின் ஒரு சில மாநிலங்களில் தானியங்கி எந்திரங்கள் நிறுவப்பட்டு உள்ளது.
அந்த தானியங்கி எந்திரங்கள் பணம் எடுக்கும் ஏடிஎம் போல ரேஷன் வழங்குவதற்காக நிறுவப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் ஏழு எந்திரங்கள் இதுவரை செயல்பாட்டில் இருக்கின்றது. இதில் மூன்று எந்திரங்கள் உத்தரபிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ளன. மாநில தலைநகர் லக்னோவின் ஜானகிபுரம் பகுதியில் கடந்த 15ஆம் தேதி தாணிய ஏடிஎம் நிறுவப்பட்டது. இந்த எந்திரம் மூலம் சுமார் 150 ரேஷன் கார்டுகளுக்கு உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் மையத்தில் இருக்கும் விரல் பதிவு எந்திரத்தில் ரேஷன் கார்டுதாரரின் விரல் அடையாளம் வைக்கப்பட்டவுடன் அந்த எந்திரத்தில் இருந்து அரிசி மற்றும் கோதுமை வெளிவரும். 3௦ வினாடிகள் இந்த நடைமுறை அனைத்தும் முடிவடைவதால் ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருக்கும் என்ற நிலை மாறி இருப்பதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.