பிரம்மாண்டத்தின் உச்சம் இதுதான்: இந்தியன் 2 சண்டைக்காட்சி!மிரட்டப்போகும் ஷங்கர்&கமல் கூட்டணி!
இந்தியன் 2 படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சி ஒன்றில் 30,000 பேரை வைத்து ஷங்கர் இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கமல் சேனாதிபதி எனும் 90 வயது முதியவராக கமல்ஹாசன் நடிக்கிறார். அவரது மனைவியாக அமிர்தவள்ளி என்ற கதாபாத்திரத்தில் 85 வயது மூதாட்டியாக காஜல் நடித்து வருகிறார். இந்தியன் முதல் பாகத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில்தான் தற்போது காஜல் நடித்துவருகிறார்.
படம் ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாகியுள்ள பல தடங்கள்களுக்கு இடையில் படம் துண்டு துண்டாக படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமல் இப்போது 50 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தைப் பற்றிய ஆச்சர்யமான தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சி ஒன்றை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் 30,000 பேரை வைத்து எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் நடிப்பதற்காக கடந்த சில மாதங்களாக கமல் தனது உடல்நிலையை பேணி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் வெளியானால் இந்த காட்சி உலகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது.