பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதியிலிருந்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
கொரோனா பெருந்தொற்றின் போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 12 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு கடந்த 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேர்வுகள் இயக்குனரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் அனைத்தும் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்த பிறகு அதனை நகலெடுத்து மாணவர்களிடம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப்பாடங்களில் சுமார் 50,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு மாணவர்கள் அனைவரும் தயாராகி வருவதாக பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.