காவல்துறையில் சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்களின் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட தகவல்!

0
240
Attention those interested in joining the police force! Information released by the government!
Attention those interested in joining the police force! Information released by the government!

காவல்துறையில் சேர்வதற்கு விருப்பம் உள்ளவர்களின் கவனத்திற்கு! அரசு வெளியிட்ட தகவல்!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் முதல் கட்டங்களில் காவலர் ஆயுதப்படை ,தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறைகாவல் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு பொது தேர்வு நடத்தி வருகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க விண்ணப்பம் வடிவங்கள் வரவேற்கப்பட்டு வந்தது.

அந்த விண்ணப்பம் ஆனது ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. தேர்வுக்கு இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தகவல் வந்த நிலை விண்ணப்பத்திற்கு சந்தேகம் மற்றும் ஏதேனும் தகவல் வேண்டுமானால் அதனை உடனடியாக பூர்த்தி செய்து கொள்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் ஸ்ரீ அபிநவ் உத்தரவின்படி மாவட்ட காவல் அலுவலகத்தில் உதவி மையங்கள் தொடங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சீருடை பணியாளர்  தேர்வில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அந்த மாற்றங்களானது தேர்வில் மொத்தம் 100 மதிப்பெண்கள் நடைபெறும் காவலர் தேர்வில் எழுத்து தேர்வுக்கு 70 மதிப்பெண்களும் உடல் திறன் தேர்வுக்கு 24 மதிப்பெண்களும், சிறப்பு மதிப்பெண்களாக ஆறு மதிப்பெண்களும் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் முன்பு நடைபெற்ற காவல் தேர்வில் எழுத்து தேர்வுக்கு 80 மதிப்பெண்களும் முதல் தரம் தேர்வுக்கு 15 மதிப்பெண்களும் சிறப்பு மதிப்பெண்களாக 5 மதிப்பெண்களும் வழங்கப்பட்டது. மேலும் தற்போது எழுத்துத் தேர்வில் 10 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு உடன் திறன் தேர்வு கூடுதலாக 9 மதிப்பெண்களும் சிறப்பு மதிப்பெண்களில் ஒன்றை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2023 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி காலி பணியிடங்களை நிரப்புவதற்கு 2599 காவலர்களை நியமிப்பதற்கு தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் காவல்துறையின் எண்ணிக்கை தற்போது 1.34 லட்சமாக உள்ளது.

அதில் புதிய இரண்டாம் நிலை காவலர்களை விரைவில் தேர்வு செய்வதற்கான செயல்முறையை விரைவில் தொடங்க காவல்துறையின் மாநில தலைவரிடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறைக்கான ஆட்சேர்ப்பு  விரைவில் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Previous articleXBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!!
Next articleதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிவாளம்!!