மெட்ரோ ரயில் சேவையில் வெளிவந்த புதிய அப்டேட்! பயணம் செய்யும் நேரம் குறைய வாய்ப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்ததன் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் நிலைக்க தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரிப்பதினால் ஊரடங்க அமல்படுத்தப்பட்டு அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் படிப்படியாக இயங்கத் தொடங்கியது.
ஆனால் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்தனர். மேலும் பேருந்து போன்ற போக்குவரத்து சேவைகளில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதினால் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை விரும்பினார்கள் அதனால் தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை வெளியிட்டு வந்தது.
அதுபோலவே சென்னை போன்ற பெருநகரங்களில் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரி செல்பவர்களுக்கு உதவும் வகையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. மேலும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கும் மெட்ரோ ரயில் நிறுவனம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில் புதுடெல்லி துவாராக இடையே செல்லும் மெட்ரோ ரயிலின் வேகம் 100 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் இந்த பாதையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் பயண நேரம் வழக்கமான நேரத்தை விட சில நிமிடங்கள் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புது டெல்லி துவாரகா ரயில் பாதையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 65 ஆயிரம் பயணிகள் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.