பொது இடங்களில் இனி முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
259
Masks are now mandatory in public places! Action order issued by the government!
Masks are now mandatory in public places! Action order issued by the government!

பொது இடங்களில் இனி முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கொரோனா பரவல் குறைய தொடங்கியது.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்து  மக்கள் மீண்டும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். இருப்பினும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. பொது இடங்களில் முடக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கிருமி  நாசினியை  பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் அமலில் இருந்து.

கடந்த சில மாதங்களாக இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் மீண்டும் கொரானா பாதிப்பு உச்சம் பெற தொடங்கியுள்ளது. திருச்சூரில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இன்று 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஐசியூ மற்றும் வென்டிலேட்டர் அமைப்புகளை தயார் செய்ய சுகாதாரம் மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பொது இடங்களில் இன்று முதல் முககவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் நினைவுபடுத்தி உள்ளார்

Previous articleஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதா இன்று தாக்கல்!! மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஆளுநர் டெல்லிக்கு பயணம்!!!
Next articleசற்றுமுன்: திடீரென முடங்கிய You Tube தளம்!! பொதுமக்கள் கடும் அவதி!!