பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் ரூ 5000 செலுத்தினால் மட்டுமே அர்ச்சனை!

0
254
Attention devotees! Only if you pay Rs 5000 in this temple, you can be ordained!
Attention devotees! Only if you pay Rs 5000 in this temple, you can be ordained!

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் ரூ 5000 செலுத்தினால் மட்டுமே அர்ச்சனை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் எந்த ஒரு கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தினந்தோறும் ஏராளக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றார்கள். மேலும்  கடற்கரை கோவில் என்பதினால் பக்தர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து கடலில் நீராடி விட்டு முருகனை தரிசித்து செல்கின்றார்கள்.

பக்தர்கள் அதிகளவு சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருச்செந்தூர் முருகன் கோவில். இந்தக் கோவிலில் சண்முகார்ச்சனை நடத்துவதற்கு கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 1500 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப சண்முகார்ச்சனை கட்டணம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு தூத்துக்குடி மண்டல இணை ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் கோவில் இணை ஆணையர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

Previous articleபத்தாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Next articleஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம்! சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் கூட்டம் அலைமோதல்!