டெல்லியில் பிப்ரவரி எட்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்கு இடையே ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நடைபெற்றது
இந்த தேர்தல் முடிவடைந்தவுடன் அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஆம் ஆத்மி மிக அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையிலேயே அதிக அளவிலான தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி டெல்லியில் ஆம் ஆத்மி 53 இடங்களிலும் பாஜக 16 இடங்களிலும் காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தற்போது ஆம் ஆத்மி 53 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்ததாகவே கருதப்படுகிறது ஏற்கனவே இரண்டு முறை முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி வெற்றியை அடுத்து அக்கட்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது