ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்?
கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவாகரத்தில், அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்று திரண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர், இதே போல நாடாளுமன்றத்திலும் ராகுலுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி வந்தனர்.
ராகுல் விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், எதிர்கட்சிகள் ஒற்றுமையுடன் இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக இணைந்து திருப்பதால், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மலிகார்ஜுனகர்கே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து, அதற்கான வியூகம் அமைப்பது, வயநாடு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலில் மாபெரும் வெற்றி அடைந்து அதன் மூலம் மத்திய பாஜக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என கூறப்படுகிறது.