தாஹி வார்த்தைக்கு எழுந்த எதிர்ப்பு! அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்ட ஆணையம்
தயிர் பாக்கெட் களில் தஹி என்று ஹிந்தியில் குறிப்பிட வேண்டும் என்ற உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவுறுத்தினால் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் தஹி என்பதற்கு பதிலாக கர்ட் என்று ஆங்கில பதத்தையே பயன்படுத்தலாம் என இந்திய உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு தரை நிர்ணய ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தயிர் பாக்கெட்களில் Curd என்ற ஆங்கில பதத்துக்கு பதிலாக தஹி என்ற ஹிந்தி வார்த்தையை குறிப்பிட்ட வேண்டும் என்று இந்திய உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான FSSAI, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு கடிதம் எழுதி இருந்தது.
மேலும் அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பாண்ட்லே தயிர் பாக்கெட் மீது அச்சிட FSSAI அறிவுறுத்தி இருந்தது.
இந்த அறிவிப்பு ஹிந்தியை திணிக்கும் முயற்சி என தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்டது இந்திய உணவு மற்றும் தர கட்டுப்பாட்டு நிர்ணய ஆணையம்.
Curd என்ற ஆங்கில வார்த்தை நீக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் இருந்து வந்த பரிந்துரைகளை தொடர்ந்து Curd என்று ஆங்கில பதத்தையே பயன்படுத்தலாம் எனவும் அதன் அருகில் அடைப்பு குறிக்கில் அந்தந்த மாநிலங்களின் பிராந்திய வார்த்தையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பின்வரும் எடுத்துக்காட்டுகளின்படி ‘Curd’ லேபிளிடப்படலாம். Curd (தயிர்), Curd (மொசரு), Curd (ஜாமுத் டவுடு), Curd(தாயிர்), Curd (பெருகு) போன்ற வெவ்வேறு மாநிலங்களின் பிராந்திய பெயரிடல் அடிப்படையில் Curd லேபிளிடப்படலாம். என்று கூறப்பட்டுள்ளது.