அம்மா உணவக தரம் குறித்து எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! அமைச்சர் கே.என் நேரு பதில்

0
230
DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!
DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!

அம்மா உணவக தரம் குறித்து எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! அமைச்சர் கே.என் நேரு பதில்

தமிழகத்தில் எண்ணற்ற ஏழை மக்கள் அன்றாடம் ஒருவேளை உணவுக்கு திண்டாடும் வேளையில் அவர்களின் பசியை போக்குவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் 2013ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகம் என்ற பெயரில் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த அம்மா உணவகம் திட்டத்தை தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியே பாராட்டி பேசியுள்ளார், அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் சிரமங்கள் போக்குவதற்கு மிக குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்கப்பட்டது. இந்த உணவகத்தில் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளைகளில் ருசியான உணவுகள் வழங்கப்பட்டு வந்தது.

அம்மா உணவகம் திட்டத்தை பற்றி கேள்வி பட்ட மற்ற மாநிலங்கள் தங்கள் அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்பி அதன் செயல்பாடுகளை அறிந்து தங்களது மாநிலத்திலும் செயல்படுத்தினர். அந்தளவிற்கு வெற்றிகரமான திட்டமாக இது இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 2021 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அம்மா உணவகத்தால் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி அதற்கு மூடு விழா காண முற்பட்டனர். ஆனால் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு குரல் வந்த காரணத்தால் அந்த முடிவை கைவிட்டனர்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் அம்மா உணவகத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் தரமில்லாத உணவுகள் வழங்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி பேசினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என் நேரு தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் அம்மா உணவகம் மூடும் எண்ணம் இல்லை. அப்படி ஒரு திட்டத்தை முதல்வர் இதுவரை கூறவில்லை. அதே சமயத்தில் ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை சரி செய்து வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Previous articleபெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ வைத்த குடிமகன்
Next articleநாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு