தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியா? முதலில் இதை செய்யுங்க! மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் பேட்டி
சென்னை:
தமிழ்நாட்டில் பாஜக வலுவின்றி இருப்பதை உணர்ந்து கொண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது தமிழ்நாட்டில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் தான் உள்ளது என கூறியுள்ளார்.
அண்ணாமலை பேச்சு:
தமிழ்நாட்டில் சமீப காலமாக பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இனிவரும் காலங்களில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது மீறி பாஜக தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் வகிக்கும் பதவியிலிருந்து விலகுவதாக கூறியிருந்தார். இது குறித்து டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்து பேசியிருக்கிறார்.
அமித்ஷாவுடன் ஆலோசனை:
சில நாட்களுக்கு முன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழ்நாட்டில் பாஜக வலுவின்றி இருப்பதாக கூறியுள்ளார். கட்சியினை மேம்படுத்துவதற்கான பணிகளை செய்திருக்கிறோம். அதற்கான பலனை அடைந்துள்ளோம். தொலைதூர கிராமங்களுக்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று அங்கு சேர்ந்திருக்கிறோம்.மற்றும்
பாஜக வலுவின்றி உள்ள இடங்களில் கூட்டணிக் கட்சிகள் கைகொடுக்கும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
குபேந்திரன் பேட்டி:
தமிழ்நாட்டில் பாஜக வலுவின்றி இருப்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உணர்ந்து கொண்டார். ஆனால் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக வளர்ந்து விட்டது தனித்து களம் கான வேண்டும் என்று நிலைமை உணராமல் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பூத் கம்மிட்டியை சரியாக கணக்கிட்டு காட்ட முடியுமா என மூத்தப் பத்திரிக்கையாளர் குபேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.