நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு !! மனித உரிமை ஆணையம் விசாரணை!!

0
195
#image_title

நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு !! மனித உரிமை ஆணையம் விசாரணை!!

தமிழ் திரைப்பட நடிகர் சிம்பு நடித்த பத்துதல திரைப்படம் தமிழகம் முழுவதும் நேற்று வெளியானது, சென்னையில் ரோகிணி திரையரங்கில் முதல் காட்சி தொடங்குவதற்கு முன்பு ரசிகர்கள் தங்களுடைய அனுமதி சீட்டினை திரையரங்கு ஊழியர்களிடம் காண்பித்து உள்ளே சென்று கொண்டிருந்தனர், அப்போது நரிக்குற இனத்தை சேர்ந்த பத்து பேர் படம் பார்ப்பதற்கு உள்ளே சென்றனர்.

நரிக்குறவ மக்கள் உள்ளே வருவதை பார்த்த திரையரங்கு ஊழியர் அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்துள்ளார், இதனை தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கவனித்த பத்திரிக்கையாளர் ஒருவர் அவர்களை ஏன் உள்ளே விட அனுமதி மறுக்கப்படுகிறது என அவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில்  பதிவேற்றினார்.

நிலைமை மோசமானதை உணர்ந்த திரையரங்கு நிர்வாகம் அவர்களிடம் சமாதானம் செய்து படம் பார்ப்பதற்கு அனுமதி அளித்தனர், இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக திரையரங்கு நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த திரைப்படம் பனிரெண்டு வயதுடையோருக்கு அனுமதி கிடையாது என்றும் படத்திற்கு யூஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட தாகவும் மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

என்னதான் திரையரங்கு நிர்வாகம் அறிக்கை கூறினாலும் தமிழக திரை பிரபலங்கள் மற்றும் கருத்தியல் வாதிகள் என பலர் குற்றம் சாட்டிய நிலையில், பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களை சம்பந்தப்பட்ட திரையரங்கிற்கு அழைத்து அவர்களிடம் நேரடி விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மகேஸ்வரன் தலைமையில் விசாரணை குழு நேற்று தங்களது விசாரணையை தொடங்கினர்.

இந்த சம்பவம் குறித்து திரையரங்கின் உரிமையாளரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, நரிக்குறவர் சமுதாய மக்களை திரையரங்கின் உள்ளே அனுமதி அளிக்காத சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஎம்ஜிஆரின் வெள்ளை தொப்பி கருப்பு கண்ணாடி அடையாளம் எடப்பாடிக்கு கை கொடுக்குமா?
Next articleதங்க நகைகளை விற்க இனி புதிய கட்டுப்பாடு! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்