தமிழக அரசுக்கு எதிராக விஷால் பதிவு செய்த வழக்கு ஒன்றில் விஷாலுக்கு ஆதரவாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்து வரும் நிலையில் திடீரென தயாரிப்பாளர் சங்கத்திற்கு என். சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமனம் செய்தது. இந்த நியமனத்துக்கு விஷால் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து விஷால் தரப்பினர் உற்சாகமடைந்துள்ளனர். விரைவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் விஷால் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது