எச்சில் துப்பி பீட்சா டெலிவரி செய்த நபர்: விசாரணையில் அதிர்ச்சி காரணம்

0
147

வாடிக்கையாளருக்கு பீட்சாவை டெலிவரி செய்யும் முன்னர் அதன் மீது எச்சில் துப்பி டெலிவரி செய்த டெலிவரி பாய் ஒருவருக்கு இரண்டரை ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

துருக்கியில் பீட்சா டெலிவரி செய்யும் நபர் ஒருவர் வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சா டெலிவரி செய்தார். அவர் டெலிவரி செய்த பீட்சாவின் பேக்கிங் சற்று வித்தியாசமாக இருந்ததை பார்த்து சந்தேகமடைந்த அந்த வாடிக்கையாளர் உடனே அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை பார்த்தார். அப்போது டெலிவரி பாய் பீட்சாவை ஓபன் செய்து அதில் எச்சில் துப்பி இருந்தது தெரிய வந்தது.

உடனடியாக இது குறித்து வாடிக்கையாளர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணையில் அந்த வாடிக்கையாளர் இதற்கு முன்னர் பீட்சா டெலிவரி செய்த போது தன்னை ஏளனமாக பேசியதாகவும் அதற்காக அவரை பழிவாங்கும் வகையில் அடுத்தமுறை பீட்சா டெலிவரி செய்யும் போது எச்சில் துப்பியதாகவும் வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து அந்த டெலிவரி நபருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Previous articleஉலகக்கோப்பை இறுதி ஆட்டம்:மோதிக் கொண்ட இருநாட்டு வீர்ரகள்!ஐசிசி அளித்த தண்டனை!
Next articleகுழந்தையே இல்லாமல் 80 ஆண்டு வாழ்க்கை! அன்பின் இலக்கணமாக வாழும் காதல் ஜோடி..!!