Breaking News, District News, State

சேலம் மாநகராட்சி பகுதியில் முறையான குடிநீர் பற்றாக்குறை!! பெண்கள் காலிகுடங்களுடன் மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்!!

Photo of author

By Savitha

சேலம் மாநகராட்சி பகுதியில் முறையான குடிநீர் பற்றாக்குறை!! பெண்கள் காலிகுடங்களுடன் மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்!!

Savitha

Button

சேலம் மாநகராட்சி பகுதியில் முறையான குடிநீர் பற்றாக்குறை!! பெண்கள் காலிகுடங்களுடன் மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்!!

சேலம் மாநகராட்சி 47 வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில் கடந்த ஆறு மாத காலமாக தண்ணீர் வராததால் குடிக்க தண்ணீர் இல்லாமல் சிரமப்படுவதாக கூறி, சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஆறு மாத காலமாக பொது குடிநீர் குழாய்களில் தண்ணீர் வராததால் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவித்தனர்.

எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுகுடிநீர் குழாய்களில் தண்ணீர் முறையாக வழங்குவதற்கு மாநாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொண்டனர்.

சேப்பாக்கம் சென்னை மைதான ஊழியர்களை பாடாய் படுத்திய நாய்!!

ஒருதலை காதல் விவகாரம் பிளஸ் 2 மாணவி மீது அரிவாள் வெட்டு!! இளைஞர் கைது!