50 ஓவர் போட்டி:35 ரன்களுக்குள் சுருண்ட அணி!மோசமான சாதனை!
நேபாளம் மற்றும் யு எஸ் ஏ ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா 35 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து மோசமான சாதனைப் படைத்துள்ளது.
கிரிக்கெட்டை உலகம் முழுக்க பரப்பும் விதமாக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அமெரிக்கா போன்ற நாடுகள் இப்போது கிரிக்கட்டில் இப்போது ஆர்வம் காட்டி வருகின்றன. இதையடுத்து ஐசிசி உலகக் கோப்பைத் தொடர் லீக் 2 போட்டியில் நேபாளம் – யு.எஸ்.ஏ அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அமெரிக்க அணி வீரர்கள் வருவதும் பெவிலியன் திரும்புவதுமாக அணிவகுப்பு நடத்திக் கொண்டு இருந்தனர். அந்த அணியின் சேவியர் மார்செல் 15 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்னாகும். நேபாளத்தைச் சேர்ந்த பவுலர் சுஷன் பாரி 16 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். அமெரிக்க அணி மொத்தமே 12 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டது. ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவே மிகவும் சீக்கிரமாக முடிந்த போட்டியாகும்.
இதையடுத்து களமிறங்கிய நேபாள அணி 5.2 ஓவர்களில் வெற்றி இலக்கை 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து அடைந்தது. இந்த போட்டியின் மூலம் குறைந்த ரன்கள் அடித்த அணி என்ற மோசமான சாதனையை அமெரிக்கா பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கனடா 36, ஜிம்பாப்வே 38, இலங்கை 43 ரன்கள் குறைந்தபட்ட ரன்களாகும்.