மானிய கோரிக்கையில் வேளாண்துறை சார்ந்து 18 புதிய அறிவிப்புகள்

0
222
TN Assembly-News4 Tamil Online Tamil News1
TN Assembly-News4 Tamil Online Tamil News1

மானிய கோரிக்கையில் வேளாண்துறை சார்ந்து 18 புதிய அறிவிப்புகள்

தமிழக சட்டபேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கையில் வேளாண்துறை சார்ந்து 18 அறிவிப்புகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது

1.இடுபொருள்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட 2023 24 ஆம் ஆண்டில் பத்து துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

2.வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்திட அனைத்து துறை தலைவர்களுக்கும் புதிய நிலை மேலாண்மை அதிகாரம் வழங்கப்படும்.

3.நெல் உற்பத்தியை அதிகரிக்க துத்தநாக சந்தை கரைத்துக் கொடுக்கும் திரவ உயிர் உரத்தை 2 லட்சம் ஏக்கருக்கு 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு இந்த ஆண்டில் ஒரு கூடிய 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.

4.கூட்டுறவு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்த கரும்பு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டி மருந்து இந்த ஆண்டில் 40 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

5.கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஆண்டில் 100 கரும்பு விவசாயிகளை வெளிமாநிலங்களுக்கு கண்டுணர் சுற்றுலா அழைத்து செல்வதற்கு 2000 கரும்பு விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் தொழில்நுட்ப பயிற்சி வழங்குவதற்கும் மொத்தம் 30 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

6.கள்ளக்குறிச்சி – பெரம்பூர் செங்கல்ராயன் சக்கரை ஆலைகளில் இந்த ஆண்டில் தலா ஒரு புதிய உருளை ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்படும்

7.திருப்பத்தூர் சேலம் மதுராந்தகம் எம் ஆர் கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் தலா ஒரு காற்றழுத்த இயந்திரமும் கள்ளக்குறிச்சி – எம் ஆர் கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இரு வழி மையப்படுத்தப்பட்ட உயர்வு அமைப்பு தலா ஒன்றும் இந்த ஆண்டில் 85 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

8.மரவள்ளி மகசூலை பெருக்க நடவக் குச்சிகள் உரம் பயிர் பாதுகாப்பு நடவக்குச்சி வெட்டும் கருவிகளுக்கு மானியம் வழங்கிட இந்த ஆண்டில் 2 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிடப்படும்.

9.தோட்டக்கலை பயிர்களில் சந்தை சார்ந்த தொழில்நுட்ப முறைகளை துல்லியமாக செயல்படுத்துவதற்காக இந்த ஆண்டில் தோட்டக்கலை தொழில்நுட்ப அலுவலர்கள் வேளாண் விற்பனை வேளாண் வணிகத்துறையில் சிறப்பு பணியாற்றப்படுவார்கள்

10.தேசிய மின்னணு வேளாண் சந்தை உத்திகள் பண்ணை அளவிலான வர்த்தகம் குறித்து இந்த ஆண்டில் வேளாண்மை தோட்டக்கலைத்துறை தொழில்நுட்ப அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

11.தோட்டக்கலை இடுபொருள்களை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக இந்த ஆண்டில் 20 வட்டாரங்களில் தோட்டக்கலை கிடங்குகள் ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்

12.திருச்சியில் உள்ள வேளாண்மை பொறியியல் பயிற்சி மையத்தினை வலுப்படுத்திட இந்த ஆண்டில் மூன்று கோடியே 48 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

13.வேளாண்மை இயந்திர வாடகை திட்டத்தினை வட்டார அளவில் கொண்டு செல்லும் வகையில் இந்த ஆண்டில் 15 வேளாண் இயந்திர ஊடகங்கள் இரண்டு கோடியே 85 லட்சம் செலவில் அமைக்கப்படும்

14.உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை சந்தை படுத்திட இந்த ஆண்டில் அரசு வணிக வளாகங்கள் சந்தை இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்

15.திண்டுக்கல் கிருஷ்ணகிரி தர்மபுரி பெரம்பலூர் தூத்துக்குடி விருதுநகர் இராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களில் நீர் வடி ப்பகுதி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த ஆண்டில் 78 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

16.தர்மபுரி மாவட்டத்தில் சுனை நீர் வடி பகுதி மேம்பாட்டுக்கான திட்டம் 5 ஆண்டுகளில் மொத்தம் 14 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்

17.*கன்னியாகுமரி ஆண்டார்குளம் கத்தரி, விருதுநகர் அதலைக்காய், திண்டிவனம் பனிப்பயரு, கரூர் சேங்கல் துவரை, ஜவ்வாதுமலை சாமை ஆகிய ஐந்து வேளாண்விளைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக நடப்பாண்டில் 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்*

18.மாநில அளவிலான வேளாண் கண்காட்சி திருச்சியிலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாழை மலர்கள் காண கண்காட்சி சென்னையிலும் பலாவுக்கான கண்காட்சி பண்ருட்டியிலும் நடத்தப்படும்.

Previous articleநடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனம் படங்களை வெளியிட தடை? நீதிமன்றம் உத்தரவு
Next articleஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி! சென்னை ஐஐடி மெகா திட்டம்