விவசாய கிணற்றில் விழுந்த பசுகன்றை தீயணைப்பு துறையினர் மீட்கும் போது பாம்பு இருந்ததால் பரபரப்பு 

0
332
There was a stir when the fire department rescued a cow that had fallen into an agricultural well because of a snake
#image_title

விவசாய கிணற்றில் விழுந்த பசுகன்றை தீயணைப்பு துறையினர் மீட்கும் போது பாம்பு இருந்ததால் பரபரப்பு 

சின்ன சேலத்தில் இரவு நேரத்தில் விவசாய கிணற்றில் விழுந்த பசு கன்றை மீட்க தீயணைப்பு துறையினர் சென்றனர். அப்போது இரண்டு பாம்புகள் கிணற்றில் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் காந்திநகரில் உள்ள முருகேசன் என்பவரது விவசாய கிணற்றில் மணி என்பவரது கன்று குட்டி தவறி கீழே விழுந்துவிட்டது உடனடியாக மாட்டின் உரிமையாளர் சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கன்று குட்டியை மீட்க உள்ளே இறங்கிய போது கிணற்றில் இரண்டு பாம்புகள் இருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாம்பை முதலில் உயிருடன் பிடித்து விட்டு பிறகு சுமார் இரண்டு மணி நேரம் போராடி கன்று குட்டியை பத்திரமாக உயிருடன் அவர்கள் மீட்டனர்.

Previous articleபங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் – ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு 
Next articleபொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தனக்காக விருப்பமனு அளித்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம்