சேலம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
வெறும் காகித பேப்பராக மட்டுமே உள்ளது. எனவே மக்கள் மீது சுமையை அதிகரிக்கும் விதமாக பட்ஜெட் இருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டினர்.
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.2023-24 ஆம் நிதியாண்டில் மொத்த வருவாய் மற்றும் மூலதன வரவுகள் 786.80 கோடி ஆகும். மூலதன செலவுகள் 788.06 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, 1.26 கோடி பற்றாக்குறையாக உள்ளது. பற்றாக்குறையில் நிதி ஆதாரங்களை கூடுதலாக பெற்று சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு ஈடுகட்டப்படும் என மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்த நிலையில் சேலம் மாநகராட்சியில் திமுக பொறுப்பேற்று 14 மாத காலம் ஆகியும் எந்த பணியும் நடைபெறவில்லை இந்த பட்ஜெட் மக்களின் மீது பணி சுமையை அதிகரிக்கும் விதமாக உள்ளது. இந்த பட்ஜெட் காகித பேப்பராக மட்டுமே உள்ளது என்று கூறி, அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத் தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும் மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் அனைத்து பணிகளையும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி காலத்தில் மாநகராட்சி பட்ஜெட் மக்கள் மீது நிறைவேற்றாதவர்கள் சுமையை அதிகரிக்க விதமாக உள்ளதாக கூறி, தலையின் மீது பட்ஜெட் மனுக்களை வைத்து நூதனமுறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடைய சேலம் அறுபதாவது வார்டு கவுன்சிலர் கூறுகையில் திமுக வார்டுகளில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அதிமுக கவுன்சிலர் என்பதால் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள மறுக்கிறார்கள்.
இதுகுறித்து கேட்டபோது பணிகளை துவக்கி விடலாம் என்று கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர் என்று குற்றம்சாட்டினார். இவ்வாறு இருந்தால் வரும் திங்கட்கிழமை அன்று காந்தி சிலை முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.