தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த குட்டி யானைகள் மற்றும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!!

0
180
#image_title

‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த குட்டி யானைகள் மற்றும் பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு!!

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மசினகுடி மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் 1700 போலிசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடபட்டுள்ளது.

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடும் பிரதமர் மோடி ‘தி எலபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண படத்தில் நடித்த ரகு, பொம்மி யானை குட்டிகளையும் பொம்மன் பெள்ளி தம்பதியினரையும் சந்திக்கிறார்.

மோடி பார்த்து ரசிக்க 30 லட்சம் மதிப்பிலான 5 களை செடிகளல் வடிவமைக்கபட்ட யானை பொம்மைகளும் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக நாளை காலை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் மோடி வருகிறார்.

அங்கு வனப்பகுதிகுள் வாகன சவாரி செல்லும் பிரதமர் மோடி பின்னர் அங்கிருந்து முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிட வருகிறார்.

அங்கு வளர்ப்பு யானைக்கு உணவு அளிக்கும் அவர் மூத்த யானை பாகன்களான கிருமாறன், தேவராஜ், குள்ளன் ஆகியோரையும், முதுமலையில் T23 புலியை உயிருடன் பிடிக்க உதவியாக இருந்த முதுமலையை சேர்ந்த பழாங்குடியின வன துறை ஊழியர்களையும் சந்தித்து பேசுகிறார்.

அதனை தொடர்ந்து அஸ்கர் விருது பெற்ற தி எலபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரையும் ரகு, பொம்மி யானை குட்டிகளையும் பார்த்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

அதன் பின்னர் நாட்டில் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் சிறப்பாக பணியாற்றிய 12 புலிகள் காப்பகங்களின் கள இயக்குனர்களையும், 8 முன்கள பணியாளர்களையும் கௌரவிக்கிறார்.

அதனை தொடர்ந்து முதுமலை தெப்பகாட்டில் இருந்து சாலை மார்கமாக மசினகுடி வரும் அவர் அங்கிருந்து ராணுவ ஹெலிகேப்டர் மூலம் மைசூர் செல்கிறார்.

பிரதமர் வருகையை ஒட்டி சட்ட ஒழுந்து ஏடிஜிபி சங்கர் மற்றும் ஐஜி சுதாகர் தலைமையில் மசினகுடி மற்றும் முதுமலை பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடபட்டுள்ளது. 8 எஸ்பிக்கள், 25 ஏடிஎஸ்பிகள் உள்பட 1700 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரதமர் வருகையை முன்னிட்டு தொரப்பள்ளி – கக்கநல்லா – பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலை மூடபட்டது. பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு நாளை காலை பிரதமர் மோடி வருவதை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக தொரப்பள்ளி – கக்கநல்லா – பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலை இன்று மாலை 4.15 மணி முதல் மூடபட்டுள்ளது.

நாளை காலை(09-04-23) 10.30 மணி வரை இந்த தேசிய நெடுஞ்சாலை மூடபடுவதால் தமிழகத்திலிருந்து கர்நாடக செல்லும் வாகனங்களும், கர்நாடகாவிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களும் கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி வழியாக போலிசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இதனிடையே வளர்ப்பு யனைகளை காண வரும் பிரதமர் மோடி கண்டு ரசிக்கும் விதமாக லண்டான செடிகளை கொண்டு 30 லட்சம் மதிப்பில் தத்ரூபமாகா வடிவமைக்கபட்டுள்ள 5 யானை பொம்மைகளும் பெங்களூரில் இருந்து வரவழைக்கபட்டு யானை முகாமில் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

முன்னதாக மசினகுடி பகுதியில் 4-மணிக்கு அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டது. முதுமலையிலிருந்து சாலை மார்க்கமாக மசினகுடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவுள்ளதால் பாதுகாப்பு கருதி தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் சட்ட ஒழுங்கு ட ஏடிஜிபி சங்கர் மற்றும் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் ஹெலிகாப்டர் தளம், மசினகுடி காவல் நிலையம், மசினகுடி சாலை, தெப்பக்காடு சாலைகளில் ஆய்வு மேற்க்கொண்டனர்.

Previous articleகேரளாவில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலி!! வனத்துறையினரின் அதிரடி நவடிக்கை!!
Next article50 அடி உயரத்திற்கு மம்முட்டிக்கு கட் அவுட்!! கேரளாவில் ‘ஏஜென்ட்’ படத்திற்காக கோழிக்கோடு ஏஆர்சி தியேட்டரின் அசத்தல்!!