பாஜகவிலிருந்து ஒதுக்கப்படுகிறாரா அண்ணாமலை? அதிருப்தியில் தலைமை!!

0
209
#image_title

பாஜகவிலிருந்து ஒதுக்கப்படுகிறாரா அண்ணாமலை? அதிருப்தியில் தலைமை!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் இணைந்தார்.

தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் அவர்களுக்கு மத்திய அமைச்சரவை பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து திரு.அண்ணாமலை அவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

மூத்த நிர்வாகிகள் கட்சியிலிருந்த போதும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை அவர்களுக்கு இப்பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த விவகாரமானது அப்போது தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

எனினும் அவர் பதவியேற்ற கொண்ட நாள் முதல் இன்று வரை அரசியல் ரீதியாக தொடர்ந்து திமுகவை எதிர்ப்பதால் பாஜக மற்றும் அதன் மாநில தலைவரான அண்ணாமலை பேசு பொருளாகவே இருந்து வருகிறார்.

அதே நேரத்தில் பல்வேறு சர்ச்சைகளும் , முறைகேடுகளும் அவரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகியான கே.டி. ராகவன் வீடியோ, நடிகை காயத்ரி அவர்களின் குற்றச்சாட்டு, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் அவர் ஆளாகியுள்ளார்.

இந்நிலையில், அதிமுக கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகளுக்கும் அண்ணாமலைக்கும் அவ்வப்போது ஏதாவது விவாதம் நடந்த வண்ணமே உள்ளது.

அதே நேரத்தில் பாஜக கட்சியை சேர்ந்த தொண்டர்களில் ஒரு பிரிவினர் அண்ணாமலை அவர்கள் கட்சித் தலைமை பொறுப்பில் இருப்பதை மறைமுகமாகவும், அதிமுக நிர்வாகிகள் சிலர் நேரடியாகவும் எதிர்த்து வருகின்றனர்.

இதில் உச்ச கட்டமாக தீடீரென்று பாஜக தனியாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அண்ணாமலை கருத்து தெரிவித்தார்.இந்நிலையில், இது குறித்து விவாதிக்க கடந்த மாதம் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அண்ணாமலை சந்தித்தார்.

அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, தமிழகத்தில், அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.இதனால் அண்ணாமலையின் கருத்து மேலிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அண்ணாமலை மீது பாஜக தலைமை ஒரு சில விவகாரங்களில் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் மீண்டும் மத்திய அமைச்சரான எல்.முருகன் அல்லது தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பாஜகவின் மூத்த நிர்வாகி வானதி சீனிவாசன் உள்ளிட்டோரில் ஒருவரை தமிழக பாஜக தலைமை பொறுப்பில் அமர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், அதனால் இதை காரணமாக வைத்தே தேர்தல் வருவதற்கு முன் அவர் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Previous articleபேட்மிட்டன் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் இந்திய வீரர்!
Next articleஇப்படி ஒரு நாட்டில் தான் வாழ்கிறோம்! நடிகை ராதிகா ஆப்தே வருத்தம்!!