மின் வினியோகம் செய்யப்படாததால் மின்சார ஒயர்களிலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கும் அவலம்!! மலை கிராம மக்களின் புலம்பல்!!

0
171
#image_title

மின் வினியோகம் செய்யப்படாததால் மின்சார ஒயர்களிலிருந்து கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கும் அவலம்!! மலை கிராம மக்களின் புலம்பல்!!

ஓசூர் அருகே அஞ்செட்டி தாலுகாவுக்குட்பட்ட கோட்டையூர் ஊராட்சியில் நாயக்கன்கோட்டை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 45 வீடுகளில் பெரும்பாலான வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக கிராம மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் மின்கம்பங்கள் அமைத்து மின்சார இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த கிராமத்தின் வழியாக உயர்மின் அழுத்த மின்சார ஒயர்கள் சென்றபோதும் வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.

மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த இந்த கிராமத்தில் வாழும் பொதுமக்கள் வேறு வழி தெரியாமல் தங்களது வீட்டின் முன் செல்லும் மின்சார ஒயர்களில் கொக்கி போட்டு தங்களது வீடுகளுக்கு மின்சாரத்தை எடுத்து வருகின்றனர்.

இதனால் காற்று மற்றும் மழை காலங்களில் அவர்களது வீட்டில் இருக்கும் மின்சாதன பொருட்கள் சேதமாகி வருகிறது.

எனவே இந்த கிராமத்தில் மின்கம்பங்கள் அமைத்து மின்சார வினியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleதுபாயில் பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத்தாயகம் சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி!! அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு!!
Next articleபேரவையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஆர்.பி. உதயகுமார்!!