தனியார் மண்டபத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கான்கிரீட் திட்டம் எதிர்ப்பு ஆலோசனை கூட்டம்!!

0
163
#image_title

ஈரோடு, மேட்டுக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் கான்கிரீட் திட்டம் எதிர்ப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி அளிக்கையில், ஈரோடு ,திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மூன்று மாவட்ட கீழ்பவானி விவசாயிகள் பாசன சங்கம் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்த வாய்க்காலில் கான்கிரீட் போடுவதற்கு விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர்.2013 ஜெயலலிதா ஆட்சியில் இந்த திட்டம் கொண்டு வந்து பிறகு கைவிட்டனர்.2020 எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இத்திட்ட அரசாணை வெளியிட்டனர்.

மூன்று மாவட்டங்களில் உள்ள 98 சதவீத ஆயக்கட்டு விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர்.முதல்வர்,அமைச்சர்கள் அதிகாரிகள் பல கூட்டங்கள் நடத்தி அவற்றின் மூலம் அரசிற்கு புரியவைத்தோம்.போலி விவசாய சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரவு வந்துள்ளது.

உத்தரவு நகல் இதுவரை வழங்கப்படவில்லை.இந்நிலையில் பெரிய அச்சம்,வாழ்வாதாரம்,குடிநீர் பிரச்சினை வந்துவிடும்,வாய்க்கல் இருகைகளாலும் உள்ள 4 லட்சம் மரங்களை வெட்ட வேண்டிய அபாயம் நிலை ஏற்பட்டு விடும் என இக்கூட்டத்தில் ஆலோசித்துள்ளோம்.

எடப்பாடி ஆட்சியில் கண்டு வந்த அரசாணை ரத்து செய்து திட்டத்தை கைவிட வேண்டும்.கீழ்பவானி கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட காரணத்தால் ஏப்ரல் 31ம் தேதி நிறுத்தப்படும் நிலையில் மே 15 வரை தண்ணீர் நீட்டிப்பு செய்து வழங்க வேண்டும்.

இத்திட்ட அரசாணையை ரத்து செய்தால் இந்த பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு கிடைத்து விடும். நான்கு போலி விவசாய சங்கங்களை தவிர எதிர் தரப்பு என்பது என்று ஒன்றும் இல்லை. இதில் இரண்டு தரப்பு இல்லை.கான்கிரீட் திட்டத்தை அரசு கைவிடவேண்டும்.

கான்கிரீட் வேண்டாம் என்பது தான் என்னுடைய விவசாயிகளின் நிலைப்பாடு என்றார்.மோகனகிருஷ்ணன் அறிக்கைப்படி கவலை இல்லை.அரசோ விவசாயிகளோ ஏற்றுக்கொள்ள வேண்டியது இல்லை என்றார்.

கான்கிரீட் போடுவதற்கு 4 போலி விவசாய சங்கம் மட்டுமே உள்ளது.துரைமுருகன் கருத்திற்கும் எனது கருத்திற்கும் மாறுபட்ட கருத்து உள்ளது.நான் இங்கு பிறந்தவன் என்பதால் எனது வாழ்வாதாரத்தை இழக்க தயாராக இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 17 முறை ஆலோசனை கூட்டம் நடத்திய போதும் அனைத்து கூட்டத்திலும் விவசாயிகள் எதிர்த்துள்ளனர்.பழைய கட்டிடங்கள் உள்ள இடங்களில் மறுபடியும் கட்ட ஆட்சேபனை இல்லை.புதிதாக எங்கேயும் கட்டிடங்கள் வேண்டாம்.