10 ம் வகுப்பு ஆங்கில தேர்விற்கான ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில் குழப்பம்!

Photo of author

By Savitha

10 ம் வகுப்பு ஆங்கில தேர்விற்கான ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில் குழப்பம்!

Savitha

10 ம் வகுப்பு ஆங்கில தேர்விற்கான ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில், 3 கேள்விகளில் குழப்பம் ஏற்பட்டிருப்பதால் மூன்று மதிப்பெண் வழங்க வேண்டும் என தேர்வுத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வு நடந்த து. வினா எண் 4, 5, 6 ஆகியவற்றுக்கு antonyms என்ற வார்த்தை குறிப்பிடப்படாததால் , மாணவர்கள் விடையளிப்பதில் திணறினர்.

இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடித த்தில், ஒரு மதிப்பெண் வினாவிற்கான 4,5,6 கேள்விக்கான விடையில் Synonyms, antonyms இரண்டும் இருப்பதால் மாணவர்கள் விடையளிக்க சிரம்ப்பட்டனர் எனவும், இந்த வினாக்களுக்கு விடை எழுதிய அனைவருக்கும் முழு மதிப்பெண்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் முறையாக பரிசீலிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் பதிலளித்துள்ளார்.