லாரியின் பின்பக்க தொட்டியை தூக்கிய போது உயர்மின்னழுத்த கம்பியில் உரசி விபத்து!

0
162
#image_title

லாரியின் பின்பக்க தொட்டியை தூக்கிய போது உயர்மின்னழுத்த கம்பியில் உரசி விபத்து – மின்சாரம் தாக்கியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சோகம்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த முசிறி அருகே செயல்பட்டு வரும் கல்குவாரியில், லோடு லாரியின் பின்பக்க தொட்டியை மேலே தூக்கி எதிர்பாராத விதமாக உயர்மின்னழுத்த கம்பியின் மீது உரசி விபத்துக்குள்ளானதில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே துடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாலாஜாப்பேட்டை அடுத்த புளித்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் பாலசுந்தரம்(40).

லோடு லாரி ஓட்டி வரும் நிலையில், முசிறியில் உள்ள கல்குவாரி ஒன்றில் ஜல்லிக்கற்களை ஏற்ற சென்றுள்ளார்.

அப்போது லோடு லாரியின் பின்பக்க தொட்டியை மேலே தூக்கிய போது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் மின்னழுத்த கம்பி மீது உரசி விபத்துக்குள்ளானது.

அப்போது மின்சாரம் தாக்கியதில் ஓட்டுநர் பாலசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகரூர் அருகே ஆடுகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!! பொதுமக்கள் கோரிக்கை!!
Next articleகுழந்தை இறப்பதற்கு முன்பு இறந்து விட்டதாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம்-சம்பவத்தால் சலசலப்பு!