மதுரை கல்லணை கிராமத்தில் கல் குவாரி செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு!

0
195
#image_title

மதுரை கல்லணை கிராமத்தில் கல் குவாரி செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு

மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரிவான பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில்  மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள கல்லணை கிராமத்தில் வசித்து வருவதாகவும் எங்க கிராம மக்கள் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றன. இந்த நிலையில் எங்களது கிராமத்தில் சுகன்யா ப்ளூ மெட்டல் என்ற தனியார் நிறுவனத்திற்கு 10 ஆண்டுகள் கல் குவாரி நடத்துவதற்கு அதிகாரிகள் அனுமதியானது வழங்கி இருக்கின்றன கல்குவாரி அனுமதி வழங்கிய பகுதியில் சுற்றிலும் 500 ஏக்கரில் பரப்பளவில் விவசாய நிலங்களே இருக்கின்றன.

இதனால் சுற்றி இருக்கக்கூடிய விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது மேலும் கல்குவாரி அமைப்பது தொடர்பாக உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது. எனவே கல்லணை கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய கல்குவாரி உரிமத்தை ரத்து செய்தும் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் உரிமம் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது விசாரணை செய்த நீதிபதிகள் மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்கள்.

Previous articleபேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும் கிருத்திகா உதயநிதி!! 
Next articleகோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி_உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!