இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து பெண்கள் பிரிவுகளை வாரணாசிக்கு மாற்றம்!! இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Photo of author

By Savitha

மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கூடைப்பந்து மற்றும் கைப்பந்து பெண்கள் பிரிவுகளை வாரணாசிக்கு மாற்றம் மத்திய அரசின் உத்தரவை கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் இந்தியா முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விளையாட்டரங்கங்கள் அமைந்துள்ளன. இவற்றில் கூடைப்பந்து கைப்பந்து ஹாக்கி மற்றும் தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

வட இந்தியாவில் சத்தீஸ்கரிலும், தென்னிந்தியாவில் மயிலாடுதுறையிலும் பெண்களுக்கான கோடைப்பந்து மற்றும் கைப்பந்து பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறையில் அமைந்துள்ள கூடைப்பந்து மற்றும் கைப்பந்து பிரிவுகளை வாரணாசிக்கு மாற்றி மத்திய விளையாட்டு துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு காரணமாக தமிழகத்தில் இருந்து எதிர்காலத்தில் மாணவ மாணவிகள் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய விளையாட்டு துறை உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் மத்திய விளையாட்டு துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.