இயக்குனர் லோகேசுடன் கைகோர்க்கும் ரஜினி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
156
Rajini joins hands with director Lokesh!! Fans in anticipation!
Rajini joins hands with director Lokesh!! Fans in anticipation!

இயக்குனர் லோகேசுடன் கைகோர்க்கும் ரஜினி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

தமிழ் நடிகர்களில் எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் மத்தியில்  மிகவும் பிரபலமடைந்த நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே, அவரின் ஸ்டைல் மற்றும் நகைசுவையான நடிப்பும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விருப்புபவர்.மேலும் முகம் சுளிக்காத வகையில் தன்னுடைய நடிப்பில் அசத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு மற்ற நடிகர்களுக்கு இல்லாத வகையில் வெளிநாடுகளில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இவரது திரைப்படங்கள் வெளியாகும் தினத்தில் திரையரங்குகளில் ஒரு திருவிழா போல கூட்டம் அலைமோதும், சமீப காலமாக இவரது திரைப்படங்கள் கலவையான விமர்சனம் பெற்றிருந்தாலும் கூட கடந்த காலங்களில் கொடுத்தது போல மிகப்பெரிய வெற்றியை தர முடியாமல் தடுமாறி வருவதாக திரைப்பட விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடைசியாக இவர் நடிப்பில் அண்ணாத்தே திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை என்பது ரசிகர்களின் கவலையாக உள்ளது. ரசிகர்களின் கவலையை போக்கும் விதமாக தற்போது வெற்றி பட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜுடன் விரைவில் கைகோர்த்து தன் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலடி தரும் வகையில்  ஒரு மிகப்பெரிய மெகா ஹிட் வெற்றி திரைப்படம் கொடுத்தாக வேண்டும் கட்டாயத்தில் அவர் உள்ளார்.

கடந்த சில மாதமாக சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு பல பேர் போட்டி போடுவதால் தன்னுடைய இடத்தை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்க நினைக்காத ரஜினி நிச்சயம் லோகேசுடன் சேர்ந்து ஒரு மெகா ஹிட் படத்தை தர வேண்டும் என்றும், இதன் மூலம் தன்னை மீண்டும் நம்பர் ஒன் நடிகர் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி உள்ளதால் லோகேசுடன்  கைகோர்ப்பார் என்று தமிழ் சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.