மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறதா? உயர்நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவு!!

0
110
#image_title

மனித கழிவுகளை சேகரித்து அதனை நீர்நிலைகளில் வெளியேற்றும் கழிவு நீர் வாகனங்களை முறைபடுத்த உத்தரவிட கோரி வழக்கு.

கழிவு நீர் சேகரிக்கும் வாகனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் செயலாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் மதுரை கிளை உத்தரவு.

விருதுநகரைச் சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், “விருதுநகர் மாவட்டத்தைச் சுற்றிலும் மனித கழிவுகளை அகற்ற கூடிய செப்டிக் டேங்க் லாரிகள் மூலம் சேகரிக்கப்படும் கழிவுகளை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலை மற்றும் ஆற்றுபடுகை பகுதிகளில் வெளியேற்றுகின்றனர் இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைகிறது. மேலும் பொதுமக்களும் குழந்தைகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே, செப்டிக் டேங்க் கழிவுநீர் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவது குறித்து முறைபடுத்த வேண்டும் மேலும், விருதுநகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் செயலாளரை எதிர்மனுதாரராக இணைத்தனர் இதுபோன்ற மனித கழிவு, கழிவு நீரை சேகரிக்கும் வாகனங்கள் உள்ளாட்சி அமைப்புகள் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்ற படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 25 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.