அர்ச்சகர்கள் பணிநீக்கம் : கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் சாடல்!!

0
155
#image_title

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் அரங்கில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் வயலூர் அர்ச்சகர்கள் பணிநீக்கம் கருவறை தீண்டாமைக்கு நீதிமன்ற அங்கீகாரமா? சம உரிமை சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் பயிற்சி பெற்ற அர்ச்சகர் சங்கம் ஒருங்கிணைந்து கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டம் தமிழ்நாடு அரசால் அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர்களை செல்லாது என்று பணி நீக்கம் செய்து மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பழக்கவழக்கம் நடைமுறைகள் என்ற அடிப்படையில் நீண்ட காலமாக கோவிலில் பூஜை தொழில் செய்து வருகிற குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பிராமணர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிக்கும் மேற்பட்ட தீர்ப்புகள் ஆகம விதிகளை ஒரு அளவுகோலாக கொள்ள வேண்டியது இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக பிறப்பையும் ஆகம விதிகளையும் அளவுகோலாக கொண்டு ஒரு தீர்ப்பை சாமிநாதன் வழங்கி இருப்பது தமிழ்நாடு அரசின் அர்ச்சகராகும் சட்டத்திற்கு எதிரானது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.தமிழ்நாடு அரசு தற்போது மேல்முறையீட்டுக்கு சென்று இருக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் இது தொடர்பான திருத்தம் கொண்டு வர வேண்டும் மதத்தின் அடிப்படையில் நியமனங்கள் இல்லை என்கிற ஒரு திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று இந்த கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் அதை வலியுறுத்துகிறது.

கிருஷ்ணகிரியில் ஜாதி ஆவணக்கொலை நடைபெற்றிருப்பது கொடூரமான கொலை தமிழ்நாடு அரசு இதுபோன்ற ஜாதி ஆவணக் கொலைகளை தடுப்பதற்கு விரைந்த சட்டம் கொண்டு வர வேண்டும்.

தெலுங்கானாவில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு 125 அடி உயரத்திற்கு வெண்கல சிலையை அமைத்திருப்பது இந்திய சாதிய சமூக இறுக்கத்தில் ஒரு தளர்வு நிலையை வெளிப்படுத்துகிறது.

புரட்சியாளர் அம்பேத்கர் சமூக நீதி இந்த மண்ணில் நிலவ வேண்டும் என்பதற்காக வாழ்வை முழுமையாக ஒப்படைத்து கொண்டவர் அனைத்து விளிம்பு நிலை மக்களுக்காக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்.

மதுரையில் பட்டியல் இன மக்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சமீபத்தில் கூட ஒரு பிரச்சினையை எழுந்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு, நீண்ட காலத்து பிரச்சினை அவ்வப்போது தலை வலிக்கிறது காலமெல்லாம் தீண்டாமை சாதிய வன்கொடுமைகள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

அண்மைக்காலமாக சமூக ஊடகங்கள் மூலம் வெளி வருகிறது இவற்றை கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது முறையாக சரியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிக இன்றியமையாதது அதன் மூலம் தான் மெல்ல மெல்ல கட்டுப்படுத்த முடியும்புரட்சியாளர் அம்பேத்கர் எந்த இடத்திலும் சமஸ்கிருதத்தை உயர்த்தி பேசியதில்லை.அம்பேத்கரை தவறாக திருக்கேற்றுவது ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

திமுக சொத்து பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிடப்பட்டதை குறித்து பாஜக மாநில தலைவர் அடிக்கடி ஒரு காமெடியனாக காட்டிக்கொண்டு இருக்கிறார் என்றார்.

ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்திகிறோம்.