பன்னீரிடம் கருப்பு பணம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு!
அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அதனை எதிர்க்கும் விதமாக பன்னீர்செல்வம் அணியினர் வரும் இருபத்தி நான்காம் தேதி திருச்சியில் மாநாடு நடத்த போவதாக அறிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த மாநாட்டிற்கு சசிகலா, தினகரன், ஆகியோரை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பன்னீர்செல்வம் நடத்தும் இந்த மாநாடு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர், அந்த வகையில் இன்றும் கூறுகையில் பன்னீர்செல்வம் நடத்தும் மாநாட்டிற்கு யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை, மாநாடு நடத்தும் அளவுக்கு அவரிடம் நிறைய கருப்பு பணம் குவிந்து கிடக்கிறது, அந்த பணத்தை வைத்து மக்களுக்கு 300 ரூபாய் கொடுத்து ஒரு லட்சம் பேரை திரட்டி விட்டோம் என பெருமை பட்டுக் கொள்ளலாம்.
பன்னீர்செல்வம் நடத்தும் இந்த மாநாட்டால் ஒரு தாக்கமும் தமிழகத்தில் ஏற்படாது, அவரிடம் நிறைய கருப்பு பணம் உள்ளது அதை இந்த மாநாடு மூலம் வெளியே கொண்டு வர போகிறார். அவர் மீது சிபிஐ விசாரணை விரைவில் மேற்கொள்ள வேண்டும், ஏற்கனவே அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய விசாரணை கிடப்பில் அரசு போட்டுள்ளது, அதை தூசு தட்டி பார்த்தால் உலகம் முழுவதும் சொத்துக்கள் எவ்வளவு உள்ளது, அதே போல தமிழ்நாட்டில், குறிப்பாக தேனி மாவட்டத்தில் எவ்வளவு சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார் என்று இந்த மாநில அரசு விசாரணை நடத்தி அதை வெளியே கொண்டு வரட்டும் என கூறி உள்ளார்.