அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் !
தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், மற்றும் அவரது மகன், மருமகன், அமைச்சரவை சகாக்கள் உட்பட அனைவரின் சொத்து பட்டியலை நேற்றைய தினம் வெளியிட்டார். இந்த பட்டியல் குறித்து அண்ணாமலை பேசும் போது அதிமுக என்ற வார்த்தையை பயன் படுத்தாமல் தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் சொத்து பட்டியலை கட்டாயம் வெளியிடுவேன் என கூறி இருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார், அதில் ஊழலில் திளைத்த கட்சி திமுக என்று அனைவருக்கும் தெரியும், ஊழலை ஒழிக்கவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக, திமுகவினர் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ளார் அவர்களின் ஒரு லட்சத்து முப்பத்தி நான்காயிரம் கோடி ரூபாயை நூறு ரூபாயாக அடுக்கி வைத்தால் நிலவிற்கு கால்வாசி தூரம் சென்று விடலாம்.
திமுகவினரின் சொத்துக்களை கைப்பற்றி அரசுடைமை ஆக்க வேண்டும், அதிமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என அவர் சொல்லவில்லை அப்படி சொல்லி இருந்தாலும் எங்களுக்கு மடியில் கணம் இல்லை அதனால் வழியில் பயம் இல்லை, அதிமுகவினரின் சொத்து பட்டியலை அவர் வெளியிடட்டும் அதன் பிறகு எங்கள் நடவடிக்கைகளை நீங்கள் பார்ப்பீர்கள், மேலும் அதிமுகவினருக்கு மறைமுகமாக பூச்சாண்டி காண்பிப்பது, மிரட்டல் விடுப்பது இதுவெல்லாம் எங்களிடம் பலிக்காது.
விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் திமுகவை மிஞ்ச ஆளே இல்லை, தமிழகம் தற்போது உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, காவல்துறையை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வேலை போனால் பரவாயில்லை தன் குழந்தையின் கால் போய்விட்டது யார் மேல் நடவடிக்கை எடுப்பது என போராடுகிறார். கடந்த இரண்டு வருடமாக தமிழகத்தில் போலீசாருக்கு எதிரான பல சம்பவம் நடைபெற்று உள்ளது. காவல் துறை நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.