எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ: புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி!

0
205
#image_title

எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ: புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி!

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ – 30க்கும் மேற்பட்ட கிராமங்களை புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளச்சேரி அருகே செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து.

எண்ணையை பிரித்தெடுப்பதற்காக ஆலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் எரிந்து நாசம்.

தீயை அணைக்கும் பணியில் ராணிப்பேட்டை மாவட்ட அலுவலர் லஷ்மி நாராயணன் தலைமையில் 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களை புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் கிராம மக்கள் அவதி.

Previous articleசெங்கல்பட்டு கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் பணி! 
Next articleதமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது! பொதுமக்கள் அவதி