சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞர்- பல்லை பிடுங்கிய காவலர்!

0
199
#image_title

சிசிடிவி கேமராக்களை உடைத்த இளைஞரின்- பல்லை பிடுங்கிய காவலர்..!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சில நாட்களுக்கு முன், சிசிடிவி கேமராக்களை உடைத்த குற்றத்திற்காக சூர்யா என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து, பல்லை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது, இந்த வழக்கு தொடர்பாக, இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

சிசிடிவி கேமராக்களை உடைத்த காரணத்திற்காக என்னை, அம்பாசமுத்தில் உள்ள என் அத்தை வீட்டிலிருந்து, கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்துசென்றார்கள்.

இது தொடர்பாக காவலர்கள் என்னிடம் விசாரணை செய்தபோது, நான் குடிபோதையில் அப்படி செய்துவிட்டேன் என்று செய்த தவறை ஒப்புக்கொண்டேன்.

இனி அப்படி செய்ய மாட்டேன் என்றும் மன்னிப்பும் கேட்டேன், ஆனால் காவலர் பல்வீர் சிங், என் பல்லை கட்டிங்பிளேட் வைத்து பிடுங்கினார். வலி தாங்க முடியாமல் நான் கதறினேன் அதற்கும் என்னை உதைத்தார், பல்லை பிடிங்கிய பின் ரத்த கசிவு நிற்கவில்லை. என் பனியன் முழுதும் ரத்தம் ஆகிவிட்டது.

என்னை ஜாமீனில் எடுபதற்காக என் அத்தை காவல் நிலையம் வந்தார், 40,000 ரூபாய் பணம் கொடுத்தால் என்னை விடுவேன் என்று சொல்லவே என் அத்தையும் பணத்தை கொடுத்து என்னை வெளியில் எடுத்தார்.

ஆனால் அதுவரை என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை, வழக்கு பதிவு செய்யாமலே என் பல்லை பிடுங்கி சித்திரவாதை செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த என் தாத்தா மாவட்ட ஆட்சியரிடம் நடந்த சம்பவங்களை கூறி, பேரனை காணவில்லை என்று வேதனையுடன் மனு அளித்துள்ளார்.

மனுவை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சூரியாவை உடனே கண்டுபிடித்து என்னிடம் பேச வைக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவின் பெயரில் சூர்யாவை கண்டுபிடித்து மாவட்ட ஆட்சியரிடம் வீடியோ காலில் பேச சொன்னார்.

மாவட்ட ஆட்சியர் அமுதா ஐஏஎஸ்

கேமரா உடைத்த குற்றத்திற்காக காவலர் பல்வீர் சிங், என்னை கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம் கொண்டு சென்று என்னை அடித்து பல்லை பிடுங்கினார், பல்லை பிடுங்கிய போது சுற்றியிருந்த மற்ற காவலர்களும் தடுக்கவில்லை.

உடைத்த நான்கு கேமராக்களுக்கு பதிலாக எட்டு கேமாரக்களுக்கான பணத்தை வாங்கினார்கள், பின் யாராவது கேட்டால் கீழே விழுந்து தான்  பல் உடைந்தது என சொல்லவேண்டும், என்று மிரட்டினார்கள் நானும் காவலர்களுக்கு பயந்து அப்படியே சொன்னேன்.

பாதிக்கபட்ட சூர்யா

எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதாவது நேர்ந்தால் அதற்கு முழு காரணமும் கல்லிடைக்குறிச்சி காவலரையே சேரும், என்று மாவட்ட ஆட்சியரிடம் இவ்வாறு பேசியதாக, செய்தியாளர்களிடம் சூர்யா கூறினார்.

Previous articleஅதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளுக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை!
Next articleமுகஸ்துதி பாடுவதை நிறுத்துங்கள்!! அமைச்சரிடம் எம்எல்ஏக்கள் வேண்டுகோள்!!