இருபதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழிவகை

0
154

இருபதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழிவகை

தமிழகத்தின் வரவு செலவு திட்டமானது கடந்த வாரம் தமிழக துணை முதல்வரும் தமிழகத்தின் நிதியமைச்சருமான o.பன்னீர்செல்வம் அவர்களால் வெளியிடப்பட்டது.

சட்டமன்றத்தில் இதுகுறித்த பொது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே பேரவையில் நேற்று தொழில்துறை அமைச்சர் சம்பத் அவர்கள் கூறுகையில், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் பலமுறை எங்கள் மாவட்டத்தில் தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

.

அவருடையை கோரிக்கையை ஏற்கும் விதமாக தமிழக தொழில்துறை அமைச்சகம் சார்பாக சிப்காட் அமைக்க புதிய நிலம் எடுக்கும் சட்டத்தின் படி 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து விட்டதாக தெரிவித்தார்.சிப்காட் தொழிற்சாலையானது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்,மயிலம் பகுதியில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

.

மேலும் இப்பகுதியானது சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் தைவான் நாட்டு தொழிற்சாலையான நைக் காலனி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு அதன் மூலம் விழுப்புரம் மாவட்டம் விரைவான வளர்ச்சியை எட்ட வழி வகுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன் மூலம் சுமார் இருபதாயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இதற்கு மூலகாரணமாக அமைந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை தனியாக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவித்தது, விழுப்புரத்தில் சட்டக்கல்லூரி அமைத்தது போன்ற திட்டங்களை செயல்படுத்தி தனது செல்வாக்கை மென்மேலும் வடமாவட்டத்தில் அதிகரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.

Previous articleஆண்களுக்கு நிகராக பெண்களால் பணியாற்ற முடியும்! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
Next articleபோட்டியில் விளையாண்டால் கைகள் இருக்காது!அஸ்வினை மிரட்டிய எதிரணியினர்!