அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!

0
216
#image_title

அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்! 

அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் என்ற முறையில் பா. ராம்குமார் ஆதித்தன் .கே. சி. சுரேன் பழனிச்சாமி ஆகிய இருவரும் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவில், அதிமுக பொதுக்குழுவின் தீர்மானத்தை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக கடந்த 20-ஆம் தேதி அங்கீகரித்து உள்ளது.

இதனை எதிர்த்து அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் என்ற முறையில் பா. ராம்குமார் ஆதித்தன் .கே. சி. சுரேன் பழனிச்சாமி ஆகிய இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளோம்.

வழக்கு தாக்கல் செய்த காரணங்கள்.

1. ஜெயலலிதா இறந்த 05.12.2016 அன்று அமலில் இருந்த கட்சி விதிகளில் 12.09.2017 பொதுக் குழு, 01.12.2021 செயற்குழு மற்றும் 11.07.2022 அன்று செய்த மாறுதல்கள், எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என மாண்புமிகு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் அடிப்படை உறுப்பினர்கள் சார்பாக தாக்கல் செய்ய 26.04.2022 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை.

2 தேர்தல் ஆணையத்திற்கு 17.11.2021, 03.12.2021, 07.12.2021, 13.12.2021, 07.07.2022, 19.07.2022, 31.12.2022, 30.01.2023, 27.02.2023, 03.04.2023, 11.04.2023 மற்றும் 19.04.2023 ஆகிய தேதிகளில் நாங்கள் அளித்த மனுக்களை கருத்தில் கொள்ளவில்லை.

3.கடந்த 23.06.2022 பொதுக் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக 06.12.2021 அன்று பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேர்வு செய்தது செல்லாது எனும் போது அவர்கள் இருவரும் இணைந்து 09.12.2021 முதல் 27.04.2022 வரை நடத்திய உட்கட்சி தேர்தலும் செல்லாது. அப்படி இருக்கையில் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்று பொதுக் குழு உறுப்பினர்கள் தேர்வும் செல்லாது எனும் போது 23.06.2022க்கு பிறகு அதிமுக கட்சியில் பொதுக் குழு உறுப்பினர்கள் கிடையாது.

4.11.07.2022 பொதுக் குழு உறுப்பினர்கள் தேர்விற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடையாது எனும் போது அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கட்சியை கட்டுப்படுத்தாது.

5. உறுப்பினர் சேர்க்கைக்கு 27.01.2018க்கு பிறகு 28.03.2023 அன்று தான் அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக கட்சி விதி 30(v) படி உட்கட்சி தேர்தல் நடத்தும் முன்பு உறுப்பினர் புதுப்பித்தல் உறுப்பினர்கள் சேர்க்கை நடத்த வேண்டும்.

6. பொதுக் குழு தேதி 11.07.2022 தீர்மானம் எண்.6 ன் படி 11.07.2022 உறுப்பினர்களாக உள்ளவர்கள் பொதுச் செயலாளர் தேர்தலில் வாக்களிக்க தகுதி உடையவர்களாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் வாக்காளர் பட்டியல் இல்லாமல் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த 17.03.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

7. கட்சி விதிகளில் 5 ஆண்டுகள் கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக இருந்தால் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு போட்டியிடலாம் என்ற விதியை மாற்றி 10 ஆண்டுகள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும், 5 ஆண்டுகள் தலைமைக் கழக பணிகளில் இருக்க வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும், ஒரு மாவட்ட செயலாளர் ஒருவருக்கு தான் முன்மொழியலாம் அல்லது வழி மொழியலாம் என மாற்றி, அதிமுக கட்சியில் 76 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில், புதிய விதிகள் படி மூன்று நபர்கள் தான் போட்டியிட முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர்.

8. பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு 18.03.2023 காலை 10.00 மணிக்கு தலைமை கழகத்தில், சென்னையில் பெற்று 20 மாவட்ட செயலாளர்களிடம் கையெழுத்து வாங்கி 19.03.2023 மதியம் மூன்று மணிக்குள், 44 மணி நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய யாராலும் முடியாது.

9. வாக்காளர் பட்டியல் வெளியிடவில்லை, தமிழ் நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் கட்சியினர் இருக்கும் நிலையில் வாக்குச்சாவடி, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் செய்யவில்லை. வாக்குபதிவு மாலை 5 மணிக்கு முடிந்த பிறகு மறு தினம் காலை 9 மணிக்குள் வாக்குப் பெட்டிகளை சென்னைக்கு கொண்டு வர செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து விவரங்கள் கிடையாது.

10.கட்சி விதிகளில் மாற்றம் எவ்வாறு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் 2010ல் அளித்த வழிகாட்டுதல்படி அதிமுக கட்சி விதி எண் 43ல் குறிப்பிட்டுள்ளது. அதற்கு மாற்றாக கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர்.

11. கடந்த 23.02.2023 மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பில் எங்கள் வழக்கை சட்டப்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

12. சென்னை உயர்நீதிமன்றம் 28.03.2023 அன்று அளித்த தீர்ப்பு எங்களை கட்டுப்படுத்தாது. அந்த வழக்குகளில் எங்கள் வழக்கு கிடையாது.

13. தேர்தல் ஆணையம் 28.03.2023 மற்றும் 13.04.2023 ஆகிய தேதிகளில் எடப்பாடி கே. பழனிசாமி அளித்த மனுக்கள் அடிப்படையில் தான் உத்தரவு பிறப்பித்தது. 12.04.2023 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு உரிய மனுக்களில் 28.03.2023 தேதிய மனு கிடையாது.

14. மேற்படி வழக்குகளில் உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் எங்கள் வழக்கை எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் மறைத்துவிட்டார்கள்.

எனவே தேர்தல் ஆணையத்தின் 20.04.2023 தேதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எங்கள் மனுக்கள் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதி தீர்ப்புகள் வரும் வரை 05.12.2016 அன்று தேர்தல் ஆணையம் வசம் இருந்த அதிமுக கட்சி விதிகளில் எவ்வித மாற்றங்கள் செய்யக் கூடாது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், பொதுச் செயலாளர் தேர்வை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

Previous articleகூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ! அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 
Next article24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்!