குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு புதிய உத்தரவு

0
232
#image_title
குஷியில் மதுபிரியர்கள்! தமிழக அரசு புதிய உத்தரவு.
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானத்தில் மதுபானம் அருந்தலாம் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒரு செக் வைத்ததுதான் டுவிஸ்ட்டாக பார்க்கப்படுகிறது.
திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்த அனுமதி வழங்கிய தமிழக அரசு. மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி பெற்று, மது விளக்கு துணை ஆணையரிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பார்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டலில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விளையாட்டு மைதானங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் அரசின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்ட அரசிதழ் F.L.12 என்ற லைசென்ஸ்க்கான கட்டணம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இந்த புதிய உத்தரவால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், மேலும் இந்த அனுமதியினால் பல புதிய பிரச்சினைகள் வரக்கூடும் என சமுக ஆர்வலர்கள் மற்றும் இல்லத்தரசிகள் தங்களது வேதனையையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.
Previous articleஅட்சய திருதியை ! 20 சதவீதம் விற்பனை அதிகரிப்பு
Next articleஜி ஸ்கொயர் நிறுவனத்தில் ரெய்டு! வருமான வரித்துறை அதிரடி