அதிமுக பொதுகுழு வழக்கு ஒத்திவைப்பு! ஜூன் 8 ல் விசாரணை

Photo of author

By Vijay

அதிமுக பொதுகுழு வழக்கு ஒத்திவைப்பு! ஜூன் 8 ல் விசாரணை.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று 3ம் நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கடந்து 2 நாட்களாக விசாரணை நடைபெற்றது. இன்று மூன்றாம் நாள் விசாரணையில் வைத்திலிங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர்  வாதாடினார்.
பொதுக்குழுவில் கட்சி விதிகளை பின்பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றவில்லை. எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து 4 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் வைத்திலிங்கம் தரப்பில் கூறினர். அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என நீதிபதிகளை தெரிவித்தனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர், பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.