முன் சீட்டில் உட்காரும் பெண்களுடன் டிரைவர்கள் பேசக் கூடாது: புதிய தடை உத்தரவால் பரபரப்பு
கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அரசு பேருந்துகளில் இனிமேல் முன் சீட்டில் உட்காரும் பெண்களிடம் டிரைவர்கள் பேசக்கூடாது என கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அரசு பேருந்துகளில் டிரைவர்கள் முன்சீட் மற்றும் பேனட்டில் பெண்களை டிரைவர்கள் உட்கார வைத்துக் கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்குவதால் கவனக் குறைவு ஏற்பட்டு விபத்து ஏற்படுவதாக பல புகார்கள் எழுந்து உள்ளது. இதனை அடுத்து முன் சீட்டில் உட்காரும் பெண்களிடம் டிரைவர்கள் பேசக் கூடாது என்றும், பேனட்டில் யாரையும் உட்கார வைக்க கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக இயக்குனர் கூறியதாவது: அரசு பஸ்கள் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பஸ்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கவனக்குறைவாக வாகனங்களை இயக்கக்கூடாது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறோம். குறிப்பாக முன்சீட்டில் உட்காரும் பெண்களிடம் பேசக்கூடாது, பேனட்டில் யாரையும் உட்கார வைக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம் என்றார்ல்