சொந்த ஊரில் எடப்பாடி யாகம்! குடும்பம் சகிதமாக பங்கேற்பு!

0
213
#image_title
சொந்த ஊரில் எடப்பாடி யாகம்! குடும்பம் சகிதமாக பங்கேற்பு.
கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழ நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, குறிப்பாக ஒற்றை தலைமை வேண்டி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீர்மானம் கொண்டு வந்தனர், மேலும் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறியதை ஓபிஎஸ் தரப்பினர் ஏற்க முடியாது என்று கூறி கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
இதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பினர் பல்வேறு நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால் அதிலும் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியதால், நீதிமன்ற தீர்ப்பின் படி அதிமுகவின் அதிகார பூர்வ பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே தேர்தல் ஆணையத்தில் தன்னை அதிமுக பொதுச் செயலாளராகவும், இரட்டை இலை சின்னத்தையும் தனக்கு வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் அதிகார பூர்வ பொது செயலாளராகவும், கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையையும் அவருக்கு வழங்குவதாக அறிக்கை வெளியிட்டது.
இதனை தொடர்ந்து அதிமுகாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு கட்சியின் அதிகாரப்பூர்வ பதவியான பொது செயலாளர் பதவியை முறைபடி பதவி ஏற்றுக் கொண்ட பின் முதன் முறையாக தனது சொந்த ஊரான எடப்பாடியில் உள்ள சிலுவம்பாளையத்தில் தனது குடும்பத்தினருடன் அங்குள்ள கோவில் ஒன்றில், இனி கட்சியில் தனக்கு ஏறுமுகம் வேண்டி மகா யாகம் நடத்தினார்.
இதனிடையே அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் எடப்பாடி பழனிசாமி முதன் முறையாக டெல்லி சென்று பாஜகவின் முக்கிய தலைவர்களான அமித்ஷா மற்றும் ஜே பி நட்டா ஆகியோரை சந்தித்து பல முக்கிய தகவல்களை பற்றி பேசவுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் ஒவ்வொரு முறையும் வழக்கு தொடரும் போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோவில்களில் யாக பூஜைகள் நடத்தி அந்த வழக்குகளில் வெற்றி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது அதிமுக பொதுச்செயலாளர் ஆன பிறகு, தனது சொந்த ஊரில் யாகம் நடத்தி நடத்தியிருப்பது முக்கிய மான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
Previous articleஇன்ஸ்டாகிராம் பெண்களே உஷார்!.
Next articleஅரசு பள்ளியில் தமிழ் தெரிந்தால் தான் வேலை!! ஐகோர்ட் உத்தரவு!!