அரசு வாகன ஓட்டுனர்களுக்கு இது கட்டாயம்! தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு

0
194
அரசு வாகன ஓட்டுனர்களுக்கு இது கட்டாயம். தமிழக அரசு உத்தரவு
அரசு வாகன ஓட்டுனர்களுக்கு இது கட்டாயம். தமிழக அரசு உத்தரவு

அரசு வாகன ஓட்டுனர்களுக்கு இது கட்டாயம்! தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு

தமிழகத்தில் வாகன விபத்துகள் பெருகி கொண்டே உள்ளது. இதை தடுப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுகள் மற்றும் அறிவுரைகள் வாகன ஓட்டுனர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

கனரக வாகனங்களையும், சரக்கு வாகனங்களையும் இயக்கும் ஓட்டுனர்கள் , நீண்ட நேரம் வாகனங்களை இயக்குவதால் அவர்கள் சோர்ந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சற்று ஓய்வெடுத்து பிறகு வாகனத்தை ஓட்டலாம் எனவும் அறிவுறுத்தப் படுகிறது.

வருடந்தோறும் அரசு போக்குவரத்து பணிமனையில் இருக்கும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் இலவசமாக கண் பரிசோதனை செய்து, கண் கண்ணாடி வழங்கப்படும்.

தற்போது முக்கிய அறிவிப்பாக அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு கண் மற்றும் காது பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் 50 வயதிற்கு குறைவாக உள்ள ஓட்டுனர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண், காது பரிசோதனை செய்ய வேண்டும்.

50 வயதிற்கு மேற்ப்பட்ட ஓட்டுனர்கள் ஆண்டிற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த பரிசோதனையில் ஓட்டுனர்கள் தகுதியற்றவர்கள் என கண்டறியப்படுபவர்கள் அலுவலக பணிகளுக்கு நியமிக்க படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleசமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? இல்லத்தரசிகளே தெரிந்து கொள்ளுங்கள்
Next articleகேந்திரிய வித்யாலயாவில் தமிழர்களுக்கு அநீதி! ஒன்றிய அமைச்சருக்கு சு வெங்கடேசன் எம்பி கடிதம்