நிலச்சரிவு ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?

0
343
#image_title
நிலச்சரிவு ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்? 
நம் நாட்டில் பேரிடர்களுள் ஒன்றான நிலச்சரிவு பற்றியும் அதன் வகைகள் பற்றியும், நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பும், பின்பும் நாம் செய்ய வேண்டியவை குறித்தும் இங்கு பார்க்கலாம்.
நிலச்சரிவு :-
மலைகள் அல்லது குன்றுகளின் ஒரு பகுதியோ அல்லது பாறைகளோ சரிந்து வீழுதல் நிலச்சரிவு எனப்படுகிறது. நீரானது, நிலச்சரிவுக்கு ஒரு முக்கிய காரணியாகும்.
தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்பகுதி நிலச்சரிவினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாகவும், பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் பகுதியாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் நிலச்சரிவுக்கு உள்ளாகும் மற்ற பகுதிகளாகும்.
அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகள்:
    நிலச்சரிவுக்கு முன் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், எச்சரிக்கை மற்றும் தயார் நிலையில் இருத்தல், அன்றாட செய்திகளை கவனித்தல், வெளியேறுவதற்கான திட்டம், வழக்கத்திற்கு மாறான சிதைந்த பொருட்கள். உடைந்த மரங்கள் மற்றும் கூழாங்கற்களின் நகர்வுகளைக் கவனித்தல் ஆகியன முக்கிய செயல்பாடுகள் ஆகும். நிலச்சரிவு அறிகுறிகள் தென்பட்டால் அப்பகுதியை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுதல் வேண்டும்.
நிலச்சரிவுக்குப் பின் :-
நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்கு அப்பால் இருத்தல் வேண்டும். உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் அன்றைய செய்திகளைக் கேட்டல், நிலச்சரிவுக்கு பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வெள்ளம், கழிவுகளின் நகர்வு ஆகியவற்றைக் கவனித்தல், நேரடியாக நிலச்சரிவு பகுதியினுள் செல்லாமல் காயம்பட்ட மற்றும் சரிவில் சிக்கியவர்களை மீட்டல் ஆகியன நிலச்சரிவுக்குப் பின் கடைபிடிக்க வேண்டிய செயல்களாகும்.
Previous articleமதுரையில் விபரீதம்! கடன் தொல்லையால் கணவன் மனைவி தற்கொலை!
Next article14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை – ராமதாஸ் கண்டனம்!