சொந்த ஹோட்டலில் சாப்பிட்டு ரிவ்யூ சொன்ன நடிகை – என்ன விளம்பரமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பாளராக இருந்து, ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பிறகு சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்த நடிகை பிரியா பவானி சங்கர், அவர் நடித்த ரீமேக் சீரியலான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. அதன் பிறகு நெட்டிசன்கள் நடிகை பிரியாவை கனவு கன்னியாக ஏற்றுக் கொண்டதுடன், நெட்டிசன்கள் அவரைக் கொண்டாடி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து “மேயாத மான்” என்னும் படத்தில் நடிகையாக அறிமுகமான நடிகை பிரியா பவானி சங்கர் அதன்பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் சிம்பு நடிப்பில் வெளியான “பத்து தல” ராகவா லாரன்ஸ் அவர்களுடன் ருத்ரன், தற்போது இந்தியன்- 2 படத்திலும் நடித்த வருகிறார்.
பல்வேறு படங்களில் நடித்து படு பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், சமீபத்தில் சென்னை மேடவாக்கம் அருகே உள்ள மாம்பாக்கம் பகுதியில் லயம்ஸ் டைனர் (Liam’s Diner) என்ற தனது சொந்த உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
தனது சொந்த உணவகத்தில் ரம்ஜான் தினத்தன்று பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை ருசிப் பார்த்து நடிகை பிரியா பவானி சங்கர், இது குறித்து ரிவ்யூ-க்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் “உங்க சொந்த உணவகத்தில் சாப்பிட்டு விட்டு நீங்களே வந்து நல்லா இருக்குன்னு சொல்றீங்களே” என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும், “நீங்களே Food Review -ல இறங்கிட்டா, நாங்க-லா என்ன பண்ணுறது” என்று ஃபுட் ரீவ்யூவர்கள் கேள்வி எழுப்பி, கலாய்த்தும் வருகின்றனர்.