பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அனுமதி மறுப்பு??

0
176
பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அனுமதி மறுப்பு
பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அனுமதி மறுப்பு

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அனுமதி மறுப்பு?? 

கல்கி எழுதிய மிகவும் புகழ்பெற்ற வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன். இந்த நூல் சோழ சாம்ராஜ்யத்தையும், ராஜராஜ சோழனை பற்றியும் குறிப்பிடும் புதினமாகும். இதை பலரும் நாடகமாக அரங்கேற்றி உள்ளனர். இதை திரைப்படமாக கொண்டு வருவதற்கு எம்.ஜி.ஆர். முதற்கொண்டு பலரும் முயற்சி செய்தனர்.ஆனால் இது மணிரத்னம் அவர்களால் சாத்தியப்பட்டுள்ளது. இதை இரண்டு பாகமாக அவர் எடுத்துள்ளார். கடந்த 2022 ம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளியானது அதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நாளை ஏப்ரல் 28 அன்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. பொதுவாக முக்கிய நடிகர்களின் புதிய படங்கள் வெளிவரும்போது ரசிகர்களுக்காக அதிகாலை சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஆனால் பொன்னியின் செல்வன் 2 சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி தரவில்லை. இத்திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதால் சிறப்பு காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றதுக்குள்ளாகியுள்ளனர்.

எந்த ஒரு திரையரங்கிலாவது அரசு அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் நடக்கிறதா என ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது முதல் நாள் வசூலை குறைக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.