கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

0
155
#image_title

கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கு தொடர்பாக முக்கிய சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பதால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கூடுதல் கால அகவசம் கேட்கப்பட்டதான் காரணமாக வழக்கினை விசாரணை செய்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி நாராயணன் முன்னிலையில் நடைபெற்றது. இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜராகினர், அதேபோல் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் வாளையார் மனோஜ், ஜம்ஷீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அதேபோல் வழக்கினை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் கூடுதல் சாட்சிகள் இடையே விசாரணை நடத்த வேண்டும் என அரசு தரப்பில் நீதிபதியிடம் கேட்கப்பட்டதால் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி வழக்கினை ஜூன் 23 ம்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸார் தலைமையில் நேர்மையாகவும், தீவிரமாகவும் விசாரணைகள் பல கோணங்களில் நடத்தப்பட்டு வருவதாகவும், இவ்வழக்கு விசாரணை சம்பந்தமாக பாரபட்சம் இன்றி விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் பல்வேறு ஆவணங்களை ஒன்று திரட்டி அதன் மூலம் கிடைக்கும் தகவல்களும் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இதுவரை சாட்சிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் செல்போன் உரையாடல்கள் தொலைத்தொடர்பு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு புலன் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இது குறித்து எதிர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இவ்வுலகில் விசாரணை செய்ய வேண்டும் என எதிர்த் தரப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு நிலுவையில் இருப்பதாக கூறினார்.