புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி!

0
192
#image_title

புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி!

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற 7 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி பல்பொருள் அங்காடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் இதனிடையே அமுதசுரபி பல்பொருள் அங்காடியின் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சரிவர இயங்கவில்லை மேலும் ஊழியர்களுக்கு 30 மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக்கோரி கடந்த 1 மாத காலமாக ஊழியர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 7 ஊழியர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து அருகில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Previous articleஅடிதூள் சூப்பர் அப்டேட்! இனி வாட்ஸ்அப் chat-lock செய்து கொள்ளலாம்
Next articleமாணவர்கள் சமூக சேவையையும் கல்வியையும் சமமாக கருத வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்