இதை மட்டும் செய்தால் போதும்.. படுத்த அடுத்த நிமிடமே தூக்கம் தான்!!

0
175
#image_title

தூக்கம் என்பது ஒரு வரம். ஒரு சிலர் படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும் இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஒரு சிலருக்கு எவ்வளவு முயன்றாலும் தூக்கம் வராது.

தற்போதைய கால சூழலில் நம்மில் பலருக்கும் தூக்கம் வருவதில்லை. இதில் வயது பாகுபாடு எதுவுமில்லை. காரணம் நாம் அனைவருமே கைபேசியை பயன்படுத்துவதுதான்.

இரவு வெகுநேரம் கைபேசியை பார்ப்பது, பிறகு காலையில் நேரம் கழித்து எந்திரிப்பது இதனால் நமக்கு தூக்கம் சரியான அளவில் இருக்காது.

ஒருவர் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். சரியாக தூங்கவில்லை என்றால் சோர்வும், மன அழுத்தமும் உண்டாகும்.

தூக்கம் வருவதற்கு மூச்சு பயற்சி மேற்கொள்ளலாம். நன்றாக மூச்சை உள்ளிழுத்து, அவற்றை நிறுத்தி பிறகு வெளியிட வேண்டும். இப்படி செய்யும் மனம் அமைதியடைந்து தூக்கம் வர ஆரம்பிக்கும்.

பகல் நேர தூக்கத்தை தவிர்த்திடுங்கள். பகலில் தூங்காமல் இருந்தால் இரவில் தூக்கம் சீக்கிரம் வந்துவிடும்.

இரவில் படுப்பதற்கு முன் சூடான தண்ணீரில் குளியுங்கள். நீங்கள் சூடான குளியல் மேற்கொள்ளும் போது உடலில் உள்ள சோர்வை நீக்கி தூக்கத்தை வரவழைக்கிறது.

உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்கலாம். மனதிற்கு இனிமையான பாடல்களை கேட்பதின் மூலம் மனம் அமைதியாகி இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும்.

படுக்கறையில் மிகவும் குறைவான வெளிச்சம் வரும் இரவு விளக்குகளை பயன்படுத்துங்கள். இரவில் தூங்குவதற்கு முன் டீ, காபி அருந்தாதீர்கள். இதனால் தூக்கம் வர மிகவும் நேரம் பிடிக்கும்.