மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!!

Photo of author

By CineDesk

மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!!

CineDesk

எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வழுக்கும் கண்டனம்

மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!!

சென்னை மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு, மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக கடந்த  2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி மரணமடைந்தார். இவரது நினைவாக கடலுக்கு நடுவே 134 அடி உயரத்திற்கு, ரூ.81 கோடி ருபாய் செலவில் பேனா சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பாக நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.

இதில் முதல் கட்டமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து இதைப்பற்றி பொது மக்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டது.

இதற்கு மத்திய அரசு சில நிபந்தனைகள் விதித்துள்ளது.

அதில் மீனவர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பேனா சின்னம் மெரினாவில் கட்டபடுவதின் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கலாம்.இதன் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகும்.

இதனையடுத்து மத்திய கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அந்த அனுமதி கிடைத்துவிட்டால்  தமிழக அரசு கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.